சுற்றுலா தலமான தேவதானம் சாஸ்தா கோவில் அருவிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேத்தூர் பகுதியில் தேவதானம் சாஸ்தா கோவில் அருவி உள்ளது. இந்நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் பல்வேறு இடங்களில் இருந்து வந்து அருவியில் குளித்து செல்கின்றனர். இதனை அடுத்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அருவியில் சனி, ஞாயிறு மற்றும் அரசு பொது விடுமுறை தினங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, குடும்பத்துடன் இந்த அருவியில் குளிப்பதற்கு வசதியாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதால் தினமும் ஏராளமான பேர் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் அருவியை சுற்றி இயற்கை எழில் சூழ்ந்த காட்சிகள் நிறைந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.