குற்றாலத்தில் இருக்கும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கும் ஐந்தருவி, மெயின் அருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனை அடுத்து ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். விடுமுறை தினத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.