Categories
சினிமா மாநில செய்திகள்

“அருவா” படத்தில் இயக்குனர் ஹரியுடன் 6வது முறையாக இணையும் நடிகர் சூர்யா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் ஹரி இறக்குகிறார். ஆறு, வேல், சிங்கம் -1, சிங்கம் -2, சிங்கம் -3 போன்ற படங்களில் இவர்கள் இணைந்து பணியாற்றி வெற்றியும் அடைந்துள்ளனர். இவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று முன்கூட்டியே அறிவித்தனர். 6வது முறையாக நடிகர் சூர்யா இயக்குனர் ஹரியுடன் கைகோர்க்கிறார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வரும் நிலையில், முக்கிய அறிவிப்பை ஒன்றில் வெளியிட்டுள்ளது. அதில், இந்த படத்திற்கு “அருவா” என்னும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். முதல் முறையாக சூர்யா படத்திற்கு இசையமைக்கிறார் இசையமைப்பாளர் D.இமான்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து தொடங்கவுள்ளது. மேலும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் முற்றிலும் கிராமபுற பின்னணியில் எடுக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த படத்தின் நாயகியாக தெலுங்கு முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தண்ணா நடிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் மற்ற நடிகர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |