அருமையான முட்டை வடை உடலுக்கும் சத்து அளிக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்..!
தேவையான பொருட்கள்:
நாட்டுக்கோழி முட்டை- 3
பொறிகடலை – 6 டீஸ்பூன்
பூண்டு – 2 பற்கள்
வத்தல் பொடி – 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
காயப்பொடி – 1/4 டீஸ்பூன்
மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை:
முதலில் பொறிக்கடலை, பூண்டு மிக்ஸரில் போட்டு பொடியாக்கி கொள்ளவும்.வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கி கொள்ளவேண்டும்.
பின்னர் முட்டை கலவையில் மிளகு பொடி, நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு, காயப்பொடி நாம் பொடியாக்கி வைத்திருக்கும் பொறிக்கடலை மாவு இவை அனைத்தும் நன்றாக கலக்கி வைத்து கொள்ள வேண்டும். 5 நிமிடம் கழித்து எண்ணெயில் போட்டு எடுத்து கொள்ளுங்கள்.. இப்போது முட்டை வடை ரெடி..!!