நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராயின் வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் இடம்பெற்றிருந்தது. இதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் இந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கல்வியை மதவாதம் பிடித்துள்ளதாகவும்.
பாடத்திட்டத்தில் என்ன இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது பாஜக ஆளும் மாநிலங்களில் முதல் வேலையாக இருப்பதாகவும். தற்போதைய தமிழக அரசு ஆர்.எஸ்.எஸ் பிடியில் சிக்கி இருப்பதாகவும். காங்கிரஸ் mp திரு. மாணிக்கம் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆட்சி அதிகாரமும் அரசியலும் மாணவர்கள் எதனை படிக்க வேண்டும் என முடிவு செய்வதா என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.