அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள யானை படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. ஹரி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சமுத்திரகனி, ராதிகா சரத்குமார், கே.ஜி.எஃப் பிரபலம் கருடா ராம், குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யானை படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் பிப்ரவரி 4-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.