சினம் படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சினம். இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலக் லால்வானி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மூவி ஸ்லைட்ஸ் பிரைவைட் லிமிடெட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் சினம் திரைப்படத்தை மே மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் ஜி.ஆர்.குமரவேலன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சினம் படத்தின் ரிலீஸ் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘சினம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக தயாராகி வருகிறது’ என குறிப்பிட்டுள்ளார். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.