கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கோவிலாங்குளம் காவல்துறை இன்ஸ்பெக்டர் விமலா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல், தனிபிரிவு ஏட்டு அழகுராஜா மற்றும் காவல்துறையினர் அரியமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது அரியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த ராமு என்பது தெரியவந்துள்ளது.
இதனைதொடர்ந்து அவரிடம் 2 அடி நீளமுள்ள அரிவாள் இருந்துள்ளது. மேலும் அவரை குறித்து விசாரணை நடத்தியதில் ராமு ஏற்கனவே கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றாவாளி என்பது உறுதியாகியுள்ளது. இதனையறிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து கமுதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ராமுவை 15 நாள்கள் சிறை காவலில் வைத்து விசாரணை நடத்துமாறு நீதிபதி முத்துலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.