தமிழகத்தில் அரிய தேர்வுகள் ரத்து வழக்கு விசாரணையில் மாணவர்கள் இடையூறு செய்ததால் வழக்கு விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
தமிழகத்தில் அரிய தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, யுஜிசி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது அரிய தேர்வுகளை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த வழக்கின் விசாரணை இன்று நடந்தது. அந்த விசாரணை ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. அதனால் அரிய தேர்வுகள் ரத்தை எதிர்த்து வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆன்லைன் விசாரணையில் லாகின் செய்தால் அதில் இடையூறு ஏற்பட்டது.
அதனால் வழக்கு விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மாணவர்களின் பேச்சு ஒலி அதிகமாக கேட்டதால் காணொளியில் இருந்து மாணவர்கள் வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். இருந்தாலும் மாணவர்கள் யாரும் வெளியேற மறுத்ததால் ஒவ்வொருவராக நீக்கப்பட்டனர்.