Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அரியலூரில் நகைக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை …!!

அரியலூரில் நகை கடை சுவரில் துளையிட்டு 50 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னக் கடை தெருவில் உள்ள சௌந்தரராஜன் என்பவருக்கு சொந்தமான கடையில் இந்த கொள்ளை நடந்துள்ளது. நேற்று இரவு இந்த கடையின் அருகில் உள்ள தேங்காய் கடையில் நுழைந்த மர்ம நபர்கள் சுவரை துளையிட்டு நகை கடைக்குள் புகுந்துள்ளனர். கடையிலிருந்து 50 சவரன் தங்க நகைகள் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்களை அள்ளிய கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

தகவலின்பேரில் நிகழ்வு இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது வடமாநில கொள்ளையர்களின் கை வரிசையாக இருக்குமோ என்பது பல்வேறு கோணங்களில் காவில்த்துறைனர்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |