மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. கவுன்சிலிங் கூட்டம் நடைபெற்றது. அதில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்து இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இதனைத் தொடர்ந்து வரி விதிப்புக்குள்ளான வரி விதிப்பு மாற்றி அமைக்கப்பட்ட பொருட்களின் விலை இன்று முதல் உயர வாய்ப்புள்ளது. அதுமட்டுமில்லாமல் பேக்கிங் செய்யப்பட்ட மற்றும் முன்கூட்டியே லேபிள் இடப்பட்ட பால், தயிர், மோர், பன்னீர் போன்ற பல்லவேறு பொருட்களுக்கு முன்பு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படவில்லை. ஆனால் தற்போது 5% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாக்கெட்டில் அடைத்து வைக்கப்படும் பிராண்ட் பெயர் அல்லாத அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு முதல் முறையாக 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது. அதனைபோல ஸ்டேஷனரி பொருட்கள், அட்லஸ் வரைபடங்கள், பிளேடு, பென்சில் ஷார்ப்பனார்கள், கத்திரிக்கோல் போன்ற தையல் சார்ந்த பொருட்களின் ஜிஎஸ்டி வரிவிதம் 12% லிருந்து 18% உயர்த்தப்பட்டுள்ளதால் இவற்றின் விலையும் உயர வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து அரிசி ஆலை இயந்திரங்களுக்கான வரி 5% லிருந்து 12% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அரிசியின் விலையிலும் இதன் தாக்கம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் காசோலைகளுக்கும் 12% ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளதால் காசோலைக்கான கட்டணத்தையும் வங்கி நிர்வாகத்தில் உயர்த்தும் நிலை ஏற்படும். இந்நிலையில் அரசி, பருப்பு மற்றும் பால் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.