Categories
மாநில செய்திகள்

“அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…? அதிகாரிகளுக்கு அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தல்…!!!!

அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை உணவுத்துறை அமைச்சர் ஆர் எஸ் சக்கரபாணி கேட்டுக் கொண்டுள்ளார். தலைமைச் செயலகத்திற்கு குடிமை பொருள் குற்ற புலனாய்வுத் துறை அதிகாரிகளுடன் வியாழக்கிழமை அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக கடந்த ஒன்றரை வருடங்களில் 1,237 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,721 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதில் 128 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

90, 122 குவிண்டால் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட 267 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து எல்லையோர மாவட்டங்களில் கடந்த காலத்தை விட தற்போது நான்கு மடங்குகள் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் பொது விநியோகத் திட்ட பொருட்கள் சரியான முறையில் நியாய விலை கடைகளுக்கு சென்று சேர்வதை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்குகளில் 269 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

அவை சரிவர இயங்காத நிலை ஏற்பட்டுள்ளது அவற்றை பராமரித்து சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்ய ஒப்பந்த புள்ளிகள் கூறப்பட்டிருக்கிறது. அரிசி உள்ளிட்ட குடிமைப் பொருட்கள் கடத்தல் தொடர்பாக தகவல்கள் அளிக்க விரும்புவோர் 1967 மற்றும் 1800-425-5901ஆகிய எண்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் தமிழகத்தில் அரிசி கடத்தலே இல்லை என்ற நிலையை அனைவரும் இணைந்து உருவாக்கிட வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் இந்த கூட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |