Categories
சினிமா தமிழ் சினிமா

அரபிக் குத்து பாட்டுக்கு…. இப்படி கூட ஆடலாம் போலயே…. சமந்தா ஆடிய வீடியோ இணையத்தில் செம வைரல்….!!!

நடிகை சமந்தா அரபி குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில்  வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் நெல்சன் இயக்கிவரும் படம் பீஸ்ட். இப்படத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே ஹீரோ, ஹீரோயினாக நடிக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் ஏப்ரல் மாதம் வெளியிடுவதாக படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை  படக்குழு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அரபிக் குத்து எனும் பாடல் சமீபத்தில் வெளியானது. மேலும் சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடல் தற்போது செம்ம ஹிட்டாகி வைரலாகி வருகிறது. இந்த பாடலின் வரிகள் அவ்வளவாக புரியவில்லை என்றாலும் தொடர்ந்து அப்பாடலை பலரும் முணுமுணுத்து  வருகின்றனர்.

இந்நிலையில் இப்பாடலுக்கு பல ரசிகர்கள் மற்றும்  திரை பிரபலங்களும் நடனமாடி சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். சமீபத்தில் பூஜா ஹெக்டேவும் நடுக்கடலில் நடனமாடிய வீடியோ வெளியிட்டது வைரலானது. தற்போது நடிகை சமந்தா மற்றும் அனிருத் ஆகியோர் இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளனர். முகமூடி அணிந்து கொண்டு பொது இடத்தில் அரபி குத்து பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சமந்தா. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இப்படத்தில் ஒரே ஒரு பாடல்தான் என்றும் பின்னணி இசைதான் படத்தில் அதிகம் இடம்பெற்று இருப்பதாகவும் தகவல்கள் வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |