அஜ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை ஏற்பாடு செய்து இருந்த வேலைவாய்ப்பு கண்காட்சி நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “மத்திய அரசு ஒவ்வொரு பிரிவினருக்கும் பல வித பலன்களை அளிக்கும் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் சமூக வாழ்க்கையை எளிதாக்கி இருக்கிறது. வேலைவாய்ப்பு முகாமின் கீழ் ஒவ்வொரு மாதமும் 16 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
உலக பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் புது வாய்ப்புகளை வழங்கும் நாடாக இந்தியா உருவெடுத்து இருப்பதாக” ரயில்வே அமைச்சர் தெரிவித்தார். நாட்டின் தேவையை முன் வைப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றிபெற இயலும். இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக 71,056 பேருக்கு பணிநியமனக் கடிதங்களை பிரதமர் வழங்கினார். குஜராத், இமாச்சலபிரதேசத்தை தேர்ந்தெடுக்கும்போது சென்ற மாதம் NDA ஆளும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதே போன்ற முயற்சி எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.