Categories
மாநில செய்திகள்

அரசு வேலையில் சேர வேண்டுமா…? இதை மிஸ் பண்ணிடாதிங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

மாதிரி ஆளுமைத் தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பை தமிழக அரசு தலைமை செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையம் நடத்தும், மாதிரி ஆளுமை தேர்வில் பங்கேற்க விரும்புபவர்கள், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம் என தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார். இதுபற்றி இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழக அரசால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையத்தில் அகில இந்திய குடிமைப் பணிகள் அடங்கிய, முதல் நிலை முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

நடப்பு நிதியாண்டில் முதன்மை தேர்வுக்கு படித்த  80 பேரில், 12 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 3 பேர் தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது இந்த மையத்தில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதில் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பிற தேவர்களும் பங்கேற்று கொள்ளலாம். இதற்கு கட்டணம் கிடையாது.

இந்த தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விருப்பத்தை, [email protected] என்ற இ – மெயில் முகவரி; 94442 86657 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்; 044 – 24621909 என்ற தொலைபேசி எண் என, ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிவிக்கலாம்.

மேலும் மாதிரி ஆளுமை தேர்வுக்கான தேதி குறித்த விபரங்கள், www என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். ஆளுமைக் தேர்வுக்காக படித்து, டில்லி செல்ல தேர்வு செய்யப்படுவோருக்கு, பயணச் செலவுத் தொகையாக, 2,000 ரூபாய், இந்த மையத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை கடந்த ஆண்டில் 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது” என்று இறையன்பு கூறியுள்ளார்.

 

Categories

Tech |