தமிழகம் மாவட்ட மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை அரசு வேலை வாய்ப்புக்கான பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்களை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. இதில் 34 லட்சத்தி 53 ஆயிரத்து 350 ஆண்களும், 39 லட்சத்து 45 ஆயிரத்து 861 பெண்களும் 273 ஆம் பாலினத்தவரும் இருக்கின்றனர் என கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் இதில் 19 முதல் 30 வயது வரையிலான பட்டதாரிகள் 29 லட்சத்து 88 ஆயிரத்து 001 பேர் 31 முதல் 45 வயது வரை உள்ளவர்கள் 18 லட்சத்து 68,931 பேர் 46 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 190 பேர் வேலை வாய்ப்புக்காக பதிவு செய்து இருக்கிறார்கள் மேலும் இதில் பொறியியல் படித்தவர்கள் 3,587 பேர் எனவும் அறிவியல் படித்தவர்கள் 6 லட்சத்து 84 ஆயிரத்து 160 பேர் எனவும் கூறப்பட்டிருக்கிறது மேலும் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1,42,292 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.