தமிழக அரசு இலவசமாக தையல் மிஷின் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெண்களின் நலனுக்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் மிக முக்கியமான திட்டம் தான் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களுக்கு அரசு தரப்பில் இருந்து இலவசமாக தையல் மெஷின் வழங்கப்பட்டு வருகிறது.
கணவனை இழந்த விதவை பெண்கள், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் உடல் ஊனமுற்ற பெண்களுக்கு இந்த இலவச தையல் மிஷின் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் இதில் விண்ணப்பிக்கலாம். அதிலும் குறிப்பாக 20 முதல் 40 வயது வரை உள்ள தையல் வேலை தெரிந்த பெண்களுக்கு மட்டும் இந்த இலவச தையல் இயந்திரம் கிடைக்கும். முகாம் வாழ் இலங்கை தமிழர்களும் இதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வருமானச் சான்று, பிறப்புச் சான்றிதழ், விதவை என்பதற்கான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டவர் என்பதற்கான சான்றிதழ், தையல் பயிற்சி முடித்து அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு இந்த இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு நீங்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.இதில் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்தில் உள்ள சமூக நலத்துறைக்கு முகவரிக்கு தபால் மூலமாக அல்லது பதிவு தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். இல்லையென்றால் நேரில் சென்று கூட கொடுக்கலாம்.