Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து கண்டக்டரிடம்…தகராறு செய்த கல்லூரி மாணவர்கள்… போலீசார் விசாரணை…!!!

அரசு பேருந்து கண்டக்டரிடம் கல்லூரி மாணவர்கள் தகராறு செய்தது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று நாமக்கலில் இருந்து திருச்செங்கோட்டிற்கு  சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பேருந்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 2 பேர் படிக்கட்டில் நின்று பயணம் செய்தார்கள். மேலும் அவர்கள் மற்ற பயணிகளுக்கு இடைஞ்சல் கொடுத்தும், கண்டக்டரிடம் தகராறு செய்தும் வந்துள்ளார்கள். இதனால் மனவேதனை அடைந்த கண்டக்டர் ராஜா நாமக்கல் உழவர்சந்தை அருகில் பேருந்தை நிறுத்திவிட்டார்.

இதனால் பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகளும் சிரமம் அடைந்தனர். இத்தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் மாணவர்கள் மாணிக்கம்பாளையம் அடுத்த கோக்கலையில் வசித்து வரும் 21 வயதுடைய கோகுல், 19 வயதுடைய முகேஷ் பாபு என்பதும் தெரியவந்துள்ளது.

இவர்கள் இந்திய மாணவர் சங்கத்தில் இருப்பதாகவும், அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் பேருந்து கண்டக்டரையும், பயணிகளையும் மரியாதை குறைவாக பேசியதாகவும், பயணிகளை மிரட்டியதாகவும் மாணவர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டது.இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து காவல்துறையினர் பேருந்தில் இருந்த பயணிகளை வேறு பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |