சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறையில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை கூடாது. அதையும் மீறி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது அருந்திய நிலையில் யாரும் பனிமனைக்குள் வரக்கூடாது. இந்நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும் அறைகள் திறந்த நிலையில் அல்லது வெட்டவெளி தளங்கள் இருப்பின் அவற்றை பணியாளர்களின் பாதுகாப்பு கருதி பூட்டி வைக்க வேண்டும். மேலும் பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து ஓட்டும் போது கைபேசி பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
எந்த ஒரு பணியாளரும் பணி நேரத்தில் பணிமனையை விட்டு வெளியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அனுமதி சீட்டில் உரிய மேற்பார்வையாளரின் அனுமதி பெற்று பாதுகாவலரிடம் தெரிவித்து வெளியே செல்ல வேண்டும். மேலும் பகல் பொழுதில் பேருந்துகள் தொழில்நுட்ப பணிகளுக்காக பணிமனைக்குள் இயக்கப்படும் போது ஓட்டுநர் உரிமம் இல்லாத எந்த ஒரு பணியாளரும் பேரு இயக்கக் கூடாது. மேலும் மின் சாதனங்களை கையாளும் பணியாளர்கள் கண்டிப்பாக கையுறை மற்றும் உரிய காலணிகளுடன் பாதுகாப்பான முறையில் பணி செய்திட வேண்டும்.இதனையடுத்து மின்சாரத்தால் இயக்கக்கூடிய இயந்திரங்கள் தரைப்பகுதியில் கண்டிப்பாக ரப்பர் மேட்கள் போடப்பட வேண்டும்.
இந்நிலையில் பேருந்துகள் பனிமலையின் உள்ளே வரும்போது ஓட்டுநர்,நடத்துனர் மற்றும் பாதுகாவலர் ஆகியோர்கள் பேருந்தின் உள்ளே ஆய்வு செய்து எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களோ அல்லது வெடி பொருட்களோ இருப்பின் அவற்றை உரிய பாதுகாப்பான முறையில் அகற்றிடவும், தேவை ஏற்படின் அருகில் உள்ள காவல்துறை அல்லது தீயணைப்பு துறையின் உதவியுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பணிமனையில் மேற்குறிப்பிட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை கிளை மேலாளரும், பணியில் இருக்கும் மேற்பார்வையாளரும், பாதுகாவலர்களும் கண்டிப்பாக உறுதி செய்திட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.