Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்… போக்குவரத்து துறையின் அசத்தல் உத்தரவு…!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு மகிழ்ச்ச்சியான  உத்தரவு ஒன்றை போக்குவரத்து துறை  பிறப்பித்துள்ளது.

பணி நிமித்தமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வசித்து வருபவர்கள் பண்டிகை, விழாக்கள், குடும்ப விசேஷங்கள் போன்றவற்றுக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயில்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ரயில் பயண டிக்கெட் கிடைக்க பெறாதவர்களின்  அடுத்த சாய்ஸ் ஆக அரசு விரைவுப் பேருந்துகள் உள்ளது. சென்னை கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட நெடுந்தூரம் செல்லும் அரசு விரைவு பேருந்துகளில் பயணிகள் வசதிக்காக அசத்தலான அறிவிப்பை அரசு வெளியிட்டிருக்கிறது.

மேலும் படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு பேருந்துகளில் இனி பெண்களுக்காக இரண்டு படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு விரைவு பேருந்திலும் கீழ் வரிசையில்எண்  1 மற்றும் நான்கு படுக்கை என இரண்டு பகுதிகள் பெண்களுக்கான ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த படுக்கை வசதியை முன்பதிவு செய்யும் பெண் பயணிகளுக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டுமெனவும் பேருந்து புறப்படும் வரை பெண்கள் முன்பதிவு செய்யவில்லை என்றால் அந்த  படுக்கையை  நடத்துனர் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பால் அரசு விரைவு போக்குவரத்து பேருந்தில் பயணிக்கும் பெண் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |