தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவச பயணம் செய்தாலும் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில் சேலத்தில் அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயண சீட்டை வடமாநிலத்தை சேர்ந்த ஆண்களுக்கு கொடுத்து உதவி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலவச டிக்கெட்டை வட மாநில ஆண்களுக்கு கொடுத்து கட்டணம் வசூலித்த நடத்துநர் நவீன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.