தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் காலி பணியிடங்கள் குறித்த விவரம் கடந்த 2019 ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2021 டிசம்பர் மாதம் தேர்வுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
இதனை அடுத்து தேர்வு எழுதிய மதுரையை சேர்ந்த விநாயகமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, அவர் பள்ளி படிப்பு முதல் கல்லூரி முதுகலை வரை தமிழ் வழியில் பயின்றதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் 2021 இல் நடத்திய பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதியதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர் 125 மதிப்பெண்களை பெற்றதாக குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு தகுதியானவர்கள் பட்டியலில் ஜூலை எட்டாம் தேதி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் முதுகலை பட்டத்தை மட்டும் தமிழ் வழியில் படித்தவர்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி வழக்கு தொடர்ந்து உள்ளார்.
இந்த வகையில் தேர்ந்தெடுக்கப்படுவதனால் பலரின் வாய்ப்புகள் பரிபோதாக கூறியுள்ளார். தற்போது தமிழ் வழியில் பயின்றவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சூழலில் அதனை பின்பற்றவில்லை என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தகுதியானவர்கள் பட்டியலிற்கு இடைக்கால தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என மனு அழித்துள்ளார். இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எந்த ஒரு பணி நியமனமும் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு கட்டுப்படாததாக அமையும் எனக்கூறி விசாரணையை செப்டம்பர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.