திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அரசு டவுன் பேருந்து காலை 8.45 மணிக்கு நேற்று கன்னிவாடியில் இருந்து வந்தது அப்போது பேருந்தை உரிய இடத்தில் நிறுத்துவதற்கு ஓட்டுனர் வாகனத்தை திருப்பி திருத்தியுள்ளார். இதனை அடுத்து கண்டக்டர் பேருந்து நிறுத்தும் இடத்தில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவர்களை விலகி நிற்கும்படி அறிவுறுத்தியுள்ளார். அப்போது மாணவர்கள் மற்றும் ஓட்டுநர், கண்டக்டருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனை பார்த்ததும் சக ஓட்டுநர், கண்டக்டர்கள் மற்றும் பயணிகள் அங்கு திரண்டு வந்ததால் மாணவர்கள் அங்கிருந்து தம்பி சென்றனர். இது குறித்து ஓட்டுநரும், கண்டக்டரும் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பேருந்து நிலையத்தில் இருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மாணவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.