தமிழகத்தில் ஏழு புள்ளி ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போலவே இந்த வருடமும் மருத்துவ பாடத் திட்டங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினியை விரைவில் முதல்வர் ஸ்டாலின் வழங்குவார் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் நேற்று சிறுநீரகம் மற்றும் இருதயமுள்ளிட்ட ஒன்பது வகையான பரிசோதனைகள் மற்றும் முழு உடல் பரிசோதனை மையங்களும் தொடங்கப்பட்டன.
அரசு பள்ளிகளில் பயின்று 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களுக்கு கடந்த வருடத்தை போலவே இந்த வருடம் மருத்துவ பாடதிட்டம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மடிக்கணினிகளை முதல்வர் ஸ்டாலின் விரைவில் வழங்குவார் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.