Categories
தேசிய செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை மாற்றம்…. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!

ராஜஸ்தானில் பள்ளி சீருடையின் நிறத்தில் மாற்றம் கொண்டுவந்ததற்கு எதிர்க்கட்சி பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த பாஜகவை சேர்ந்த வசுந்தரா ராஜே தலைமையிலான அரசு, பள்ளி மாணவர்களின் சீருடை நடத்தை காவி நிறத்திற்கு மாற்றி ஆணையிட்டது.

இதற்கு காங்கிரஸ் கட்சி அப்போதே கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், தற்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளதால் 3 ஆண்டுகளுக்கு பின்னர், பள்ளி மாணவர்களின் சீருடையின் நிறத்தை மாற்றி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கடந்த 8-ஆம் தேதி மாநில பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவின்படி, அடுத்த வருடம் முதல் அரசு பள்ளி மாணவர்கள் நீலச்சட்டை மற்றும் அடர் சாம்பல் டிரவுசர் அல்லது பேன்டும், மாணவிகள் நீல நிற குர்தா அல்லது சட்டைகள் மற்றும் அடர் சாம்பல் அல்லது பாவாடையும் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து பாஜகவை சேர்ந்த முன்னாள் கல்வித்துறை அமைச்சர் வாசுதேவ் தேவ்னானி பேசியிருப்பதாவது, முந்தைய பாஜக அரசு பள்ளி சீருடை நிறத்தை புதிய தோற்றம் மற்றும் பெருமைமிகு அனுபவத்தை அளிக்கும் வகையில் மாற்றியுள்ளது. மேலும் இந்த முடிவை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்த பிறகே எடுத்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து, காங்கிரஸ் அரசின் இந்த முடிவு 98 லட்சம் பெற்றோருக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும். மேலும் அரசு பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு எதிராக கடுமையான குற்றங்கள் இழக்கப்பட்டு கல்வித்தரம் சீரழிந்து வருகிறது. ஆனால் அரசின் கவனம் பள்ளி சீருடையில் நிறத்தை மாற்றுவதில் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |