Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்!…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

நேற்று சிவகங்கை மாவட்டத்தில் அரசு நடுநிலைப்பள்ளி, தொடக்கப் பள்ளிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள்ளும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் உள்ளிட்ட கவுன்சிலிங் நடைபெற்றது. மாவட்ட அளவில் சுமார் 12 ஊராட்சி ஒன்றிய நடுநிலை, தொடக்க பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கு 63 காலிப்பணியிடங்கள் உள்ளன. மேலும் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு பள்ளி வளாகத்தில் இந்த இடங்களுக்கான பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.

முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமையில் மாவட்ட கல்வி அலுவலர்கள் தேவகோட்டை சண்முகநாதன், திருப்பத்தூர் பங்கஜம், சிவகங்கை முத்துச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு காலையிலும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் கவுன்சிலிங் மாலையிலும் நடத்தப்பட்டது. தொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை மாறுதல் என்பதால் இந்த கவுன்சிலிங்கில் ஏராளமான இடைநிலை ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே முதுநிலை ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் அளித்து, இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை பதவிஉயர்வு அடிப்படையில் நிரப்பும் பட்சத்தில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்றும், இதன்மூலம் பொதுத்தேர்வு நெருங்க உள்ள நிலையில் மாணவர்களுக்கு கற்பித்தல் பணி சீராக இருக்கும் மிக எளிமையாக மாணவர்கள் தேர்வுக்கு தயாராவார்கள் எனவும் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் கந்தசாமி கூறியுள்ளார்.

அதேபோல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கலந்தாய்வு நடைபெறும் இடமான சிவகங்கை மருதுபாண்டியர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் அமைக்க வேண்டும் என்றும், கடந்த 25ஆம் தேதி ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் ஏற்பட்ட குளறுபடிகளை நீக்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |