தமிழகத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் தினந்தோறும் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே மாராந்தை அரசு பள்ளியில் பயிலும் 52 மாணவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் 104 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் ஒரு மாணவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும், மற்ற மாணவர்களுக்கு பரவும் அபாயம் உள்ளது. மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டதை அடுத்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் தற்போது கொரோனா பரவத் தொடங்கியுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.