ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்பிபி பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் கடந்த 20ஆம் தேதி கொரோனா பாதிக்கப்பட்டு, குணமடைந்தார். பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .அவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி, நடித்து, தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் ஜொலித்த எஸ்பிபி இன்னும் பாடல்களில் மூலம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூரில் அரசு இசை மற்றும் நடன பள்ளி ஒன்று துவங்கப்பட்டது. அந்தப் பள்ளிக்கு டாக்டர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் அரசு இசை மற்றும் நடன பள்ளி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மேகபதி கெளதம் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த எஸ்பிபி, நெல்லூரில் 1946ஆம் ஆண்டு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.