Categories
தேனி மாவட்ட செய்திகள்

அரசு பள்ளிகள் மற்றும் மருத்துவமனையில் ஆய்வு…. மாவட்ட ஆட்சியர் திடீர் அதிரடி….!!!!

மாவட்ட ஆட்சியர் அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.

தேனி மாவட்டத்திலுள்ள கண்டமனூர் பகுதியில் அங்கன்வாடி மையம் ஒன்று உள்ளது. இங்கு திடீரென மாவட்ட ஆட்சியர் முரளிதரன் சென்று ஆய்வு மேற்கொண்டார். இவர் அங்கன்வாடி மையத்தில் இருப்பவர்களிடம் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம், எடை அளவிடும் கருவி, விளையாட்டுப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் வேலாயுதபுரம், புதுராமச்சந்திரபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது குழந்தைகளின் வாசிப்பு மற்றும் எழுத்து திறன், கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள், வருகை பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். இவர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது மருத்துவர்களிடம் மருத்துவமனையில் புற நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள், நோயாளிகளுக்கு மருத்துவ மனையில் உள்ள வசதிகள் போன்றவற்றை கேட்டறிந்தார். மேலும் இந்த ஆய்வின் போது வருவாய்த்துறை அலுவலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |