மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் அவர்களை வேறு பள்ளிக்கு மாற்றலாம் என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.
நமது தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தற்போது மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு தொழில் கல்விகளை படிக்க அதிக அளவில் சேர்கின்றனர். இதனால் 11-ஆம் வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நிலையில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளிகளிலும் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 30-க்கும் குறைவாக இருந்தால் அருகில் உள்ள வேறு அரசு பள்ளிக்கு மாணவர்களை மாற்ற வேண்டும்.
மேலும் ஊரகப் பகுதியில் அமைந்துள்ள பள்ளியில் 15-க்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் அவர்களையும் வேறு அரசு பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும். இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.