Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளுக்கு 5 நாள்….. தனியார் பள்ளிகளுக்கு 10 நாள் விடுமுறை….. வெளியான அறிவிப்பால் குழப்பம்….!!!!

தமிழகத்தில் வரும் செப்டம்பர் 23 முதல் 30 ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களை காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பன்னிரண்டாம் வகுப்பு ஜூன் 20-ம் தேதியும், 11ஆம் வகுப்புக்கு ஜூன் 27ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட்டன.  நடப்பு கல்வி ஆண்டிற்கான நாள்காட்டியை பள்ளி திறப்புக்கு முன்னரே தமிழக அரசு வெளியிட்டிருந்தது. அதில் பள்ளி இயங்கும் நாட்கள், விடுமுறை நாட்கள், காலாண்டு, அரையாண்டு, பொதுத் தேர்வு நடைபெறும் நாட்கள் உள்ளிட்ட தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தன.

அந்த வகையில் காலாண்டு தேர்வு தொடர்பான செய்திகளை பள்ளிக்கல்வித் துறை உறுதிசெய்துள்ளது. 11, 12 வகுப்புக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரையும், ஒன்று முதல் பத்தாம் வகுப்பு 26 ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை உள்ளது. தொடர்ந்து மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் ஆயுத பூஜை விடுமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில தனியார் பள்ளிகளில் காலாண்டு விடுமுறை உடன் தசராவிற்கு சேர்த்து 10 நாட்கள் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக பெற்றோர்களுக்கு மெசேஜ் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

Categories

Tech |