Categories
மாநில செய்திகள்

அரசு பணிகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு…. தமிழக அரசு அதிரடி…..!!!!

தமிழக சட்டப்பேரவை இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதன்படி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா, நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து சிறப்பு திட்டங்கள் துறை அறிக்கை தொடர்பாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.

அப்போது, 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை என கூறிய அவர், 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்படவில்லை என்றும் 143 அறிவிப்புகளுக்கு ஒரு ரூபாய் கூட ஒதுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும். போட்டி தேர்விற்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்படும். மேலும் அரசு பணிகளில் பெண்களுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Categories

Tech |