Categories
மாநில செய்திகள்

அரசு நீட் பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம் …!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் இன்று தொடங்கின.

இந்தியா முழுவதும் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும் நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் 2017 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த 2019-20 ஆம் கல்வி ஆண்டில் தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்புகளில் 7,000 மாணவர்கள் சேர்ந்து பயனடைந்த நிலையில் 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற 15,000-ற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து அரசு பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இணைய வழியில் நடத்தப்படும் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கின.

Categories

Tech |