Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும்…. கோரிக்கை விடுக்கும் கிராம மக்கள்….!!!!!!!!!

ஆனைமலை தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து கொண்டிருக்கிறது. இந்த சூழலில் ஆனைமலையை அடுத்த அம்பராம்பாளையம் செல்லும் வழியில் சுந்தரபுரி பகுதியைச் சேர்ந்த தங்காய்(60), குருசாமி (36) என்பவர்கள் வசித்து வருகின்றனர். கூலி  தொழிலாளர்களான  இவர்கள் நேற்று வேலைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மதியம் மூன்று மணி அளவில் அந்த பகுதியில் பலத்த காற்று கூடிய கனமழை பெய்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கிருந்து 70 ஆண்டுகள் பழமையான பெரிய மரம் வேருடன் சாய்ந்து தங்காய் மற்றும் குருசாமி போன்றோரின் வீடுகளின் மீது விழுந்துள்ளது.

இதில் தங்காயின் வீடு முற்றிலும் சேதுமடைந்தது. ஆனால் குருசாமி வீட்டில் ஒரு பகுதியில் மரக்கிளை விழுந்தால் ஓடுகள் உடைந்துள்ளன. அவருடைய வீட்டில் சுற்றுச்சுவரும்  சேதம் அடைந்திருக்கின்றது. மரம் விழுந்த போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. மேலும் மரம் விழுந்து வீடு முற்றிலும் சேதம் அடைந்திருப்பதால் அரசு நிவாரண உதவி செய்ய வேண்டும் என தங்காய் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |