அரசு நிலங்களில் சிலை அமைக்க கூடாது என்று உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை மாவட்டம் , அவினாசி சாலையில் மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர்களின் சிலைகள் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை அகற்ற கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு இன்று விசாரணை செய்தது. பின்னர் அரசு நிலத்தை சிலைகள் அமைக்க பயன்படுத்தக் கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மேலும் எதிர்காலத்தில் அனுமதி இன்றி சிலைகள் அமைப்பதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இந்த சிலை வைக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு 6 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவு பிறப்பித்தனர்.