கேரளா மாநிலம் மல்லபுரம் பகுதியை சேர்ந்தவர் பிந்து(42). இவரது மகன் விவேக் (24) 10-ம் வகுப்பில் நல்ல தேர்ச்சி பெறவேண்டும் என்று அவருக்கு சொல்லிக்கொடுப்பதற்காக புத்தகத்தை பிந்து கையிலெடுத்தார். இவரது மகனின் வெற்றிக்காக எடுக்கப்பட்ட புத்தகம், இவரது வெற்றிக்கே வழிவகுத்துள்ளது. ஒரு கட்டத்தில் அரசு தேர்வுக்கு தயாராகலாம் என்று எண்ணிய பிந்து, ஒரு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்துள்ளார்.
3 முறை தேர்வெழுதி அதில் தோல்வியடைந்த அவர் தற்போது தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதே தேர்விற்கு தயாரான அவரது மகனும் தேர்ச்சி பெற்றிருப்பது தான் சுவாரஸ்யம். பிந்து Last Grade Servants எனப்படும் தேர்வில் 92-வது தரவரிசையிலும், விவேக் Lower Divisional Clerk எனப்படும் தேர்வில் 38-வது தரவரிசையிலும் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.