Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அரசு – தனியார் பள்ளி, கல்லூரிகளில் கட்டுப்பாடு…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!!!

தமிழ்நாட்டில் பிஏ5 என்ற ஒமைக்ரான் பாதிப்பு 25 சதவீதம் வரை தற்போது பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதை தொடர்ந்து செய்தாலே கொரோனா தொற்றை தடுக்கலாம் என்று தெரிவித்துள்ளது.

ஒரு சில மாவட்டங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் .அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் கொரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |