Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அரசு டாக்டரின்” கையெழுத்து மற்றும் முத்திரையை பயன்படுத்தி மோசடி….. இ-சேவை மைய பெண் நிர்வாகி அதிரடி கைது….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஒட்டி தனியார் இ-சேவை மையம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆதார் கார்டு விண்ணப்பிக்க வந்த மூதாட்டிக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கும் காமேஷ் பாலாஜி என்பவர் பெயரில் போலியாக கையெழுத்து போட்டு, போலி முத்திரையை பயன்படுத்தி மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து டாக்டர் காமேஷ் பாலாஜி தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் இ-சேவை மையத்தில் சோதனையில் ஈடுபட்ட போது அரசு டாக்டர் பெயரில் போலி முத்திரை மற்றும் கையெழுத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது உறுதியானது. இது தொடர்பாக இ-சேவை மையத்தின் பெண் நிர்வாகி சசிகலா(34) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய சண்முகம் மற்றும் இலியாஸ் ஆகிய இரண்டு பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |