இந்தியாவில் பெரிய மாநிலமாக உத்திரப்பிரதேசம் விளங்குகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பாக இருக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன.
இந்தநிலையில் உத்திரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென்று வலியுறுத்தி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் விஜய் ரத யாத்திரை என்ற பெயரில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் லக்னோவில் நடைபெற்ற அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியதாவது, இங்கிருந்து டெல்லிக்கு சென்றவர்களின் கதவு உத்தரபிரதேச மக்களால் மூடப்பட்டு, அவர்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள். மேலும் அரசின் சொத்துக்களை மத்திய அரசு விருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து 2022-ல் எங்களது கனவு கட்டாயமாக நிறைவேறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.