அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று துவங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவானது கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முழுதும் உள்ள 109 கல்லூரிகளில் உள்ள 87 ஆயிரம் இடங்களில் 75 ஆயிரம் இடங்கள் நிரம்பின. இந்நிலையில் முதுநிலைப் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவானது இன்று முதல் தொடங்கியுள்ளது.அக்டோபர் 20-ம் தேதிவரை இதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 60 ரூபாயும் ,பட்டியலினத்தவருக்கு ரூபாய் இரண்டும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவி தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.