இந்தியாவில் ஓய்வூதிய காலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பலன்கள் கிடைக்கிறது. இந்த ஓய்வூதிய பலனை கடந்த 2003-ஆம் ஆண்டில் மத்திய அரசு மாற்றியுள்ளது. அதன்படி ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து அவர்களுடைய PF கணக்கில் கூடுதல் தொகை செலுத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது. இதையடுத்து அவர்களுடைய பணி காலம் நிறைவு பெறும் போது அந்த தொகை வழங்கப்படுகிறது. இந்த தொகை வயதான காலத்தில் ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அதேபோல் மத்திய அரசு சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்கு சுதந்திர சைனிக் சம்மன் யோகனா திட்டத்தின் கீழ் பென்சன் வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ரூ.3,274.87 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 23,566 பேர் இந்த திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். அன்மையில் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் தற்போது அகவிலைப்படி நிவாரணமும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசு இந்த திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வருகின்ற 2025-26ஆம் ஆண்டு வரை சுதந்திர சைனிக் சம்மன் யோஜனா திட்டத்தை நீட்டிக்க உள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடும் தியாகிகளை சிறப்பிக்கும் விதமாக 2025-26ஆம் ஆண்டு வரை இந்த பென்ஷன் திட்டத்தை நீட்டிக்க மத்திய உள்துறை அமைச்சகம் முன்மொழிதலை தயார் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.