Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர் வெட்டிக் கொலை…. பழிக்குப்பழியாக தீர்த்துக்கட்டிய கும்பல்…!!

புதுச்சேரியில் அரசு ஊழியர் பழிக்குப்பழியாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் காரைமேடு அருகே உள்ள திருநகரில் குடிநீர் தொட்டி விநியோகம் செய்யும் ஆபரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். நேற்றுமுன்தினம் ஆயுத பூஜையை முன்னிட்டு மணிவண்ணன் தண்ணீர் தொட்டிக்கு பூஜை செய்வதற்காக காரைமேடு பகுதிக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை ஓட ஓட விரட்டி சரமாரியாக தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட பல இடங்களில் வெட்டி உள்ளது. இதனால் மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இது குறித்து கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த கொலை குறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக மணிவண்ணன் கொலை செய்யப்பட்டுள்ளார். அதாவது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபயிற்சிக்கு சென்ற காமராஜர் நகரைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மாந்தோப்பு சுந்தர் என்பவரை மணிவண்ணனின் மகன்களான சுந்தர் மற்றும் வினோத் ஆகியோர் கொலை செய்யதுள்ளனர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என போலீசார் கூறினர். இந்நிலையில் கடந்த மாதம் 30ஆம் தேதி மாந்தோப்பு சுந்தரின் நினைவு நாள் வந்தது இதற்காக பழிவாங்க காத்திருந்த அவருடைய மகன்கள் மணிவண்ணனை தீர்த்து கட்டியுள்ளது அம்பலமானது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மாந்தோப்பு சுந்தரின் மனைவி செல்வி அவரது மகன்களான ஜோஸ்வா மற்றும் மது மேலும் பாஸ்கர், ஆனந்த் ராஜ், சரவணன், புத்தர், முருகன் ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |