பிஎஸ்என்எல் ஊழியர்கள் தங்களது வேலையை காப்பாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான தொலைதொடர்பு நிறுவனங்களான எம்டிஎன்எல் மற்றும் பிஎஸ்என்எல் போன்றவற்றை ஒன்றாக இணைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த இணைப்பை எதிர்த்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம் பிரதமர் நரேந்திர மோடிக்கு புதன்கிழமை அன்று கடிதம் எழுதியிருக்கிறது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்க எழுதிய அந்த கடிதத்தில் எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் உடன் இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
எம்டிஎன்எல் நிறுவனத்தின் ரூ.26,000 கோடி கடனை கையாளவும், பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு நிதியுதவி வழங்கவும் தொழிற்சங்க மத்திய அரசிற்கு பரிந்துரை அளித்துள்ளது. எம்டிஎன்எல் நிறுவனத்தை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைப்பதில் மத்திய அரசு மிகவும் தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. எம்டிஎன்எல் நிறுவனத்தின் கடன் மற்றும் ரூபாய் 26,500 கோடிக்கும் அதிகமான சொத்துக்களை சிறப்பு நோக்கத்திற்காக வாகனத்தில் சேர்க்க தொலைத்தொடர்புத்துறை பரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது. அதன்பின்தான் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் மக்களவை உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான தகவல்தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு பிஎஸ்என்எல் வருவாய் ஈட்ட முயற்சித்து வருவதாக கூறியுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு புதிய சேவையை தொடங்க நாட்டில் உள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இணையாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்க வேண்டும் என்று இந்த பரிந்துரை செய்துள்ளது. பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் போன்றவற்றின் தலைவருமான நிர்வாக இயக்குனருமான பிரவீன் குமார் 2025-26ஆம் ஆண்டுக்குள் பிஎஸ்என்எல் நிறுவனம் லாபகரமாக இருக்கும் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு ரூ.26,000 கோடிக்கு மேல் கடன் உள்ளதால் சந்தையில் நிலைத்திருக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவேதான் அதை பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைக்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.