தமிழகத்தில் தற்காலிக அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இந்நிலையில் வருவாய் துறையில் கருணை அடிப்படையில் அரசு பணி பெற்றவர்களுக்கு பணி வரன்முறை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி வரை கரணை அடிப்படையில் அரசுப்பணி பெற்றோருக்கு பணி வரன்முறை செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் விதி தளர்வு மற்றும் அரச அணைகளுக்கு விளக்கம் தேவைப்படுவோர் தற்காலிக அரசு பணியாளர்களாக கருதி ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.