புதுச்சேரி மாநிலத்தில் 13 முக்கிய துறைகள் இயங்கி வரும் நிலையில் பல அரசு ஊழியர்களும் அதில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி அரசு போனஸ் வழங்கியது.அதேசமயம் மத்திய அரசின் ஒப்புதலின் படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4% அகலவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே 34 சதவீத அகலவிலைப்படி வழங்கப்பட்ட நிலையில் தற்போது 38 சதவீதமாக DA உயர்த்தி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அகல விலைப்படி உயர்வு ஜூலை 1ஆம் தேதி முதல் அவளுக்கு வர உள்ளது. இந்நிலையில் புதுச்சேரி அரசு துறைகளில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு ஒற்றை வெளியாகி உள்ளது.அதாவது அரசு ஊழியர்கள் தாமதமாக அலுவலகங்களுக்கு வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேசமயம் தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.