Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே…! ஹோலிக்கு முன் ஹேப்பி நியூஸ்…. மத்திய அரசு தகவல்…!!

அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு ஹோலி பண்டிகைக்கு முன் அறிவிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரச ஊழியர்கள் அகவிலைப்படி உயர்வுக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி,ஜூன்  மாதங்களில் அகவிலைப்படி உயர்வு பற்றிய தகவல் வந்து சேரும். அதிலும் அண்மைக்காலமாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ள காரணத்தால் அகவிலைப்படி உயர்வுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஹோலி பண்டிகைக்கு முன்பாக இதுகுறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னால் தீபாவளிக்கு முன்பு அகவிலைப்படி உயர்வு பற்றி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மேலும் ஏற்கனவே வரவேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையும் ஒருமனதாக செலுத்த அரசு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  கூற பட்டு வருகிறது. இப்போதைய சூழலில் அகவிலைப்படி 31% வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்த கட்டமாக அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரி மாதம் இந்தியாவில் நுகர்வோர் விலை பணவீக்கம்6.01% உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் நுகர்வோர் விலை பணவீக்கம்5.66% உயர்ந்தது பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வரும் இச்சூழலில் முன்னெப்போதுமில்லாத விட அகவிலைப்படி உயர்வுக்கான கோரிக்கை வலுத்துள்ளது.

Categories

Tech |