Categories
தேசிய செய்திகள்

அரசு ஊழியர்களே கவனம்…. பென்சன் ரூல்ஸ் புதிய மாற்றம்…. மத்திய அரசு உத்தரவு…!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கான குடும்ப பென்ஷன் விதிமுறைகளை மத்திய அரசு புதிதாக மாற்றம் செய்து  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தீவிரவாதம், மாவோயிஸ்ட் ஊடுருவல் போன்றவற்றால்  பாதிக்கப்பட்டிருக்கின்றன ஜம்மு, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களுக்கு குடும்ப பென்ஷன் விதிகள் மாற்றப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த பகுதிகளில் காணாமல் போன மத்திய அரசு ஊழியர்களுக்கான பென்ஷன் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தீவிரவாதம் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் பனிக்காலத்தின் போது காணாமல் போனால் அவர்களின் குடும்பத்திற்கு பென்ஷன் வழங்கப்பட வேண்டும். மேலும் புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர் பனிக்காலத்தின் போது தொலைந்துவிட்டால் சம்பள நிலுவை தொகை, பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு போன்ற பலன்கள் அவரது குடும்பத்திற்கு செலுத்தப்பட வேண்டும்.

காணாமல்போன மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் வந்து விட்டால் இடைப்பட்ட காலத்தில் குடும்பத்திற்கு செலுத்தப்பட்டு வந்த பென்ஷன் தொகையை அவரது சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளப்படும். இந்த நிலையில் இதற்கு முன்னதாக மத்திய அரசு ஊழியர் பணி காலத்தில் தொலைந்து விட்டால் அவரது குடும்பத்திற்கு பென்ஷன் வழங்கப்படாது. மாறாக அவர் தொலைந்து 7 ஆண்டுகள் கழித்து அல்லது அவர் இறந்து விட்டார் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு குடும்பத்திற்கு பென்ஷன் பணம் வழங்கப்படும்.

Categories

Tech |