Categories
உலக செய்திகள்

அரசு ஊழியர்களே… உஷார்… உஷார்.. “இனி இது கட்டாயம்”…. மீறினால்…. எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

சார்ஜாவில் பணிப்புரியும் அரசு ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொது மக்களும் கொரோனா இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

சார்ஜாவில் அரசு துறையில் பணிபுரியும் ஊழியர்களும், அதனை பயன்படுத்தும் பொதுமக்களும் சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனா தங்களுக்கு இல்லை என்ற பி.சி.ஆர் பரிசோதனை முடிவை கட்டாயமாக கையில் வைத்திருக்க வேண்டும் என்று அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

இதிலும் கொரோனா தொடர்பான தடுப்பூசியினை முழுமையாகப் பெற்றுக் கொண்டவர்கள் கையில் வைத்திருக்க வேண்டிய பி.சி.ஆர் பரிசோதனை முடிவு கட்டாயமாக 14 நாட்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா செலுத்தி கொள்ளாதவர்கள் 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் சார்ஜாவின் மனித வள மேம்பாடு துறை தெரிவித்துள்ளது. அதோடு மட்டுமின்றி அரசு ஊழியர்கள் மேல் குறிப்பிட்டுள்ள தகவலை மீறினால் ஆண்டு வருமானத்தில் பிடித்தம் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |