Categories
மாநில செய்திகள்

“அரசு ஊழியர்களுக்கு” 7 நாட்கள் தற்காலிக விடுமுறை…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு தற்போது பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியரின் மனைவி பிரசவத்திற்கு பிறகு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்காக மனைவி கருத்தடை செய்த மருத்துவமனையின் மருத்துவரிடமிருந்து மருத்துவச் சான்றிதழ் வாங்கி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்கபட்டால் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும். மேலும் டியூபெக்டமி மூலம் இல்லாமல் கர்ப்பத்தை மருத்துவரீதியாக நிறுத்துவதற்கும் அரசு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை அரசு ஊழியர்களின் மனைவிக்கு பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Categories

Tech |