நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் காரணமாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது. இப்படி கொரோனா தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், அசாம் மாநில அரசு ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடையும் செய்தியை அம்மாநில முதல்-மந்திரி. ஹிமாந்தா பிஸ்வா சர்மா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அரசு ஊழியர்கள் ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தங்கள் பெற்றோருடனும், சகோதர சகோதரிகளுடனும் நேரத்தை செலவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். அந்த இரு தினங்கள் சிறப்பு விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் தங்கள் பெற்றோரின் ஆசிர்வாதத்துடன் புதிய அசாமை புதிய இந்தியாவை கட்டமைக்க ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஜனவரி 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகள் தொடர்ந்து வருவதால் அடுத்த வாரம் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.